“சரக்கு வேன் மோதி ஒருவர் பலி” 2 பேர் படுகாயம்!

0 391
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மறவனூர் அருகே திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வஊசி நகரை சேர்ந்த குமார்(வயது 19),

 

தமனம்பட்டியை சேர்ந்த துளசி(வயது 20), சக்திவேல்(வயது 21) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேரும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை செல்லும் வழியில் சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த இருவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.