திருச்சி வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் மனோகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருச்சி வீட்டு வசதிப் பிரிவிற்குட்பட்ட நவல்பட்டு மற்றும் கரூர் திட்டப் பகுதிகளில் மொத்த கொள்முதல் அடிப்படையில் முழு தொகையையும் ஒரே தவணையில் செலுத்தியவர்களுக்கு உடனடியாக கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் 23.08.2021 முதல் 31.08.2021 வரை நடைபெற உள்ளது.
எனவே முழுத் தொகையையும் செலுத்தி ஒதுக்கீடுதாரர்கள் அசல் ஆவணங்களுடன் திருச்சி வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தை அணுகி கிரயப்பத்திரம் பெற்று பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.