ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(44). அதே பகுதியில் வசிப்பவர் குணா(23). இருவரும் நண்பர்கள். சம்பவத்தன்று இரவு இருவரும் மது அருந்திக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த குணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தை குத்தினார்.
இதில் பலத்த காயமடைந்த ஆனந்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள குணாவை தேடி வருகின்றனர்.