எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான மேஜை பந்து போட்டிகள்
திருச்சி எஸ் ஆர் எம் பல்கலைக்கழக வளாகத்தில் திருச்சி மாவட்ட மேஜை பந்து போட்டிகள் துவங்கியது .
திருச்சி எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் உடற்கல்வித் துறை மற்றும் திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் வளர்ச்சி கழகம் இணைந்து எஸ் ஆர் எம் பல்கலைக்கழக வளாகத்தில் நான்காவது மாவட்ட அளவிலான தகுதி நிர்ணய டேபிள் டென்னிஸ் போட்டிகளை நடத்துகின்றனர். துவக்க விழா எஸ் ஆர் எம் வளாக தலைவர் டாக்டர் ஆர் சிவக்குமார் தலைமை வகித்தார். முதன்மை இயக்குனர் என் சேதுராமன் மற்றும் வளாக இயக்குனர் டாக்டர் என். மால்முருகன் முன்னிலை வகித்தனர். வளாக உடற்கல்வித்துறை தலைவர் முனைவர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார். துணை இயக்குனர் டாக்டர் என் பாலகிருஷ்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார் . திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் வளர்ச்சிக் கழக தலைவர் மேஜர் பொன்னுரத்தினம் வாழ்த்துரை வழங்கினார். போட்டிகளில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். நிறைவில் உடற்கல்வி இயக்குனர் முனைவர் மாணிக்கம் நன்றி கூறினார்.