தாலுக்கா அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்ட பைக் திருட்டு

0 275
Stalin trichy visit

திருச்சி, நவ.17 திருச்சி தில்லைநகர் 1வது குறுக்கு சாலையைச் சேர்ந்தவர் சிவகுமார் (53). இவர் தனது மோட்டார் பைக்கை லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு அலுவலக வேலையாக சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிவகுமார் லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.