தாயுடன் தகராறு சிறுமி தூக்கிட்டு தற்கொலை

0 277
Stalin trichy visit

திருச்சி, நவ. 17 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுக்காவை சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி ரமணிகலா. இவர்களது மகள் திவ்யதர்ஷினி(15). முருகேசன் கடந்த 12 வருடத்திற்கு முன்பு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். ரமணிகலா தனது மகள் திவ்யதர்ஷினியுடன் சோழிங்கநல்லூரில் வசித்து வருகின்றனர். திவ்யதர்ஷினி ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தார். வீட்டு வேலை செய்வது சம்பந்தமாக தாய், மகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் சிறுமியின் அம்மா சித்தாள் வேலைக்காக சென்று விட்டார். சிறுமி வேலைக்கு செல்லாமல் வீடு பூட்டி இருப்பதாக அருகில் இருந்தவர்கள் சிறுமியின் அம்மாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறுமியின் தாய் அக்கம் பக்கம் உதவியுடன் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே பார்க்கும்போது திவ்யதர்ஷினி தனது வீட்டில் சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார். சிறுமி திவ்யதர்ஷினிக்கு முன்கோபம் அதிகமாக வரும் எனவும் வீட்டு வேலைகள் மற்றும் சமையல் வேலைகள் ஏதும் சரிவர செய்யாமல் இருந்ததால் அவரது அம்மாவிற்கும் சிறுமிக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.