கோவிலுக்குள் நுழைந்து சூறையாடிய இளநிலை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார்

0 308
Stalin trichy visit

அகில இந்திய இந்து மகா சபா அமைப்பின் திருச்சி மாவட்ட தலைவர் மணிகண்டன் திருச்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி மாநகராட்சி 38-வது வார்டு எடமலைப்பட்டிபுதூர் கிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது. கடந்த 17ம் தேதி பொன்மலை கோட்ட இளநிலை பொறியாளர், கோவிலுக்குள் நுழைந்து அங்கு போடப்பட்டிருந்த பழைய கல் வேலிகளை காலால் எட்டி உதைத்தும், கையால் பிடுங்கியும் எறிந்து உள்ளார். ஏன்? என்று கேட்டபோது, ஆக்கிரமிப்பு அகற்றம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதுதொடர்பாக உதவி செயற்பொறியாளரிடம் கேட்டபோது, தன்னுடைய உத்தரவின் பேரில் தான் அது நடந்ததாக கூறியுள்ளார். எந்த ஒரு அரசு வழிகாட்டுதல் இல்லாமல் முறையற்ற முறையில் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து சூறையாடிய இளநிலை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் மாநகராட்சி முழுவதும் சுவரொட்டி மூலம் பறைசாற்றி போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.