உலக காதுகேளாதோர் 4-வது தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் கடந்த 23ம் தேதி முதல் தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு காதுகேளாதோர் தடகள கவுன்சில் சார்பில் புதுடெல்லி ஜவகர்லால்நேரு ஸ்டேடியத்தில் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்டம் துறையூர் நாகலாபுரத்தை சேர்ந்த தடகளவீரர் மணிகண்டன் 100 மீட்டர் தடகள ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் தேர்வு பெற்றார். இதையடுத்து போலந்து நாட்டில் நடந்த தடகள போட்டியில் இந்தியாவில் இருந்து மணிகண்டன் உள்பட 6 பேர் பங்கேற்றனர். இதில் நீளம் தாண்டுதலில் மணிகண்டன் அரையிறுதியில் சிறப்பாக தாண்டினார். இதன் மூலம் அவர் 2ம் பிடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இதனால் அவர் பதக்கத்தை வென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று இரவு நடந்த நீளம் தாண்டுதல் இறுதி போட்டியில் அவர் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்.