வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, 1.5 லட்சம் ரொக்கம் கொள்ளை

0 446
Stalin trichy visit

 

திருச்சி, ஜன.30 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள பரஞ்சோதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 18 பவுன் நகை 1.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

தாளக்குடி ஊராட்சியில் உள்ள பரஞ்சோதி நகரைச் சேர்ந்தவர் செல்லையன் மகன்கிருஷ்ணகுமார்(43).  இவர் கடந்த 27ஆம் தேதி இரவு குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் பக்கத்து வீட்டு நபர் கோலம் போட வரும் போது வீட்டின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டுஅதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த டாலர் செயின், நெக்லஸ், காப்பு, வளையல், மோதிரம், செயின் உள்ளிட்ட 18 பவுன் நகைகளும் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் எடுத்து சென்று விட்டனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் கொள்ள சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.