தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

0 317
Stalin trichy visit

திருச்சி, ஜன.30 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

நொச்சியம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் நொச்சியம் மேல தெருவை சேர்ந்த 50 வயதான ராஜா என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.