ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் : ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் வெளிக்கோடை பூச்சாத்தி விழா இரண்டாம் நாள்

0 901
Stalin trichy visit

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் வசந்த உற்சவ விழா நிறைவுற்ற நிலையில் நேற்றுஸ்ரீரங்கநாயகி தாயார் வெளிக்கோடை உற்சவம் நேற்று துவங்கி பத்து தினங்கள் நடைபெறுகிறது.நாள்தோறும் நான்கு உற்சவம்’ என்று சிறப்பிக்கப்பெறும் திருவரங்கம் திருக்கோயிலில், விழாக்களும் உற்சவங்களும் நாள்தோறும் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் வைகாசி மாதம் ஶ்ரீரங்கநாயகித் தாயாருக்குக் கோடை உற்சவம் நடைபெறும். `தாயார் கோடை உற்சவம்’ என்ற பெயரில் நடைபெறும் கோடை விழா நேற்று (2.06.2021) தொடங்கியது. 5 தினங்கள் வெளிக் கோடை, ஐந்து தினங்கள் உள் கோடை என பத்துத் தினங்கள் கோடை உற்சவம் கொண்டாடப்படும்.கடுமையான கோடைக்காலம் அனைத்து உயிரினங்களையும் வாட்டியெடுப்பதுடன் பலவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் இதில் இறைவனும் விதிவிலக்கல்ல எனக் கருதி பக்தர்கள் தாங்கள் வழிபடும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பெருமாள், தாயாரைக் குளிர்விக்க `பூச்சாற்றி விழா’ நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் ஸ்ரீரங்கநாதருக்கும் அதன்பிறகு ரங்கநாயகித் தாயாருக்கும் இந்த உற்சவம் தலா பத்து நாள்கள் நடைபெறும். அதன்படி ரங்கநாதருக்குக் கோடை விழா முடிவடைந்துநேற்று முதல் 10 தினங்களுக்கு நாச்சியாருக்கு விழா தொடங்கியது. ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயாரின் கருவறையில், ஶ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்தங்கள் பின்புறமாக வீற்றிருக்க, ஶ்ரீரங்கநாயகித் தாயார் உற்சவ மூர்த்தியாகச் சேவை சாதிக்கிறார். தாயாரின் கருவறையில் மூன்று உற்சவ மூர்த்தங்களும் அருள்பாலிப்பது மிகவும் விசேஷமான அருட்கோலம். நாச்சியாரின் அழகுக்கு அழகு சேர்க்கவும், கோடையின் கடுமை பாதிக்காமல் இருக்கவும், இந்த நாளில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரித்துப் பக்தர்கள் ஆனந்தம்கொள்வார்கள். ரங்கநாதரின் ஏழு நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் ஆகியோரில் ரங்கநாச்சியாரே முதன்மையானவர்.இவருக்குச் செய்யப்படும் எல்லா பூஜைகளும் மற்ற தேவியரைச் சென்றடையும் என்பது ஐதீகம். இந்தப் பூச்சாற்றி விழாவின் இரண்டாம் நாள் திருநாளான இன்று மாலை 5.30 மணிக்கு ரங்கநாச்சியார் கருவறையிலிருந்து புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு இரவு 7.00 மணிவரை மலர் அலங்காரத்தில் சேவை சாதித்த பின்னர், இரவு 7:45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு உள்கோடை ஆஸ்தான மண்டபத்துக்கு வந்தார். பின்னர் 8:45 மணிக்கு அங்கிருந்து புறப்படுவார். கோடைக்கான உற்சவம் என்பதால், இது தினமும் 5.30 மணிக்கு மேல் கொண்டாடப்படுகிறது. கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் மலர்களுக்கு உண்டென்பதை உணர்ந்த பக்தர்கள் கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். எந்தப் பேதமும் இல்லாமல் எல்லா பக்தர்களிடமிருந்தும் பெறப்படும் மலர்கள் நாச்சியாருக்குச் சாத்தப்படும். கோயில் அர்ச்சகர்கள் மாலை ஐந்து மணியிலிருந்து பக்தர்களிடம் மலர்களை பெறத் தொடங்குவார்கள். மேலும், திருக்கோயில் அரையர்கள் கொண்டுவரும் மலர்ப் போர்வையும் நாச்சியாருக்குச் சாத்தப்படும். இந்த மலர்க்குவியலில் அதிகமாக மல்லிகை மலர்களே காணப்படும். கடுமையான வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டவை மல்லிகை மலர்கள். அதுமட்டுமன்றி உஷ்ணத்தால் உண்டாகும் பல நோய்களைத் தீர்க்கும் ஆற்றலும் இதற்கு உண்டு ஆயினும் கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை .ஸ்தலத்தார்கள், ஸ்தானிகர்கள், பட்டர்கள் ,கோவில் ஊழியர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை

 

Leave A Reply

Your email address will not be published.