கருவாட்டுப் பொறி : வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்

0 889
Stalin trichy visit

 

‍‍இயற்கையான முறையில் பயிருக்கும், நிலத்திற்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில், கருவாட்டுப் பொறி அமைத்து பூசணி வண்டு மற்றும் பழ ஈயைக் கட்டுப்படுத்தலாம்.
‍‍பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை விரட்ட பல்வேறு மருந்துகள் உள்ளன. எனினும் இயற்கையான முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த கருவாட்டு பொறியை பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
காலியான தண்ணீர் ‌பாட்டில்
பொடி கருவாடு
நாட்டுச் சர்க்கரை
தயாரிப்பு முறை :
5 கிராம் பொடி‌ கருவாட்டில் , சிறிதளவு நாட்டுச் சர்க்கரை சேர்க்க வேண்டும்.
பின் அவற்றை காலி தண்ணீர் பாட்டில் வைத்து அதை‌ நூலால் கட்டிவிட‌ வேண்டும்.
தண்ணீர் பாட்டிலில் 3 செ.மீ., அளவிற்கு 6 அல்லது 8 துளைகள் இட வேண்டும்.
அந்த பாட்டிலை ஒரு குச்சியில் கட்டி அதை பயிர்களுக்கு இடையே நட வேண்டும்.
கருவாட்டு வாடையில் தண்ணீர் பாட்டிலினுலள் செல்லும் பூச்சிகள் இறந்துவிடும்.
இதனால்‌ பயிர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
ஏக்கருக்கு 20 பைகள் கட்ட‌ வேண்டும்.
20 நாட்களுக்கு ஒரு முறை கருவாட்டை மாற்றினால் போதும்.
ஒவ்வொரு முறையும் ரூ.100 தான் செலவாகும்.
இதன்மூலம் பூசணி வண்டு மற்றும் பழ ஈயை எளிமையாக கட்டுப்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு :
செல்வன் ப.தரணிதரன், மற்றும் த. தேசிங்குராஜா இளங்கலை வேளாண் மாணவர்கள் மற்றும் முனைவர் B.குணா இணைப்பேராசிரியர், வேளாண் விரிவாக்கத் துறை.நாளந்தா வேளாண்மைக் கல்லூரி, எம்.ஆர்.பாளையம், திருச்சி.மின்னஞ்சல் : baluguna8789@gmail.com. தொலைபேசி: 9944641459 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.