சிறுநாவலூரில் அடுத்தடுத்த வீடுகளில் நகைகள் திருட்டு; டவுசர் திருடனுக்கு போலீசார் வலைவீச்சு 

0 313
Stalin trichy visit

திருச்சி துறையூரை அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சிறுநாவலூர் ஊராட்சி, இந்த கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் நடராஜன் விஜயலட்சுமி தம்பதியினர் பெட்டிக்கடை நடத்தி வரும் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொழில் விஷயமாக வெளியூர் சென்று இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை தனியாக இருந்த விஜயலட்சுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமி விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் அதனுடன் இணைந்து இருந்த ஆறு தங்க காசுகள் குண்டு உள்ளிட்ட 4 பவுன் மதிப்பிலான தங்க நகைகளை திருட கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயற்சி செய்துளார்.

அப்போது ஜெயின் தலை முடியில் சிக்கியதால் விஜயலட்சுமி அதிர்ச்சியில் எழுந்து பார்த்த போது அரைக்கால் டவுசர் மற்றும் தலையில் தலைப்பாகை அணிந்து கையில் இரும்பு கம்பி உடன் நகைகளை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளார். உடனே வீட்டின் வெளியே வந்து விஜயலட்சுமி திருடன் திருடன் என கத்தியுள்ளார்- அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி இருட்டில் மறைந்து விட்டார்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் பணிபுரியும் கணபதி என்பவரது வீடு மற்றும் காயத்ரி கவியரசன் ஆகியோர் வீடுகளிலும் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.