குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

0 319
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பதிவிக்கு 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயது பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கு குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூக பணி, சமூகவியல், மனித நல மருத்துவம், மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் வருகிற 15ந்தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மெக்டொனால்டு ரோடு கலையரங்க வளாகம், கண்டோன்மெண்ட் திருச்சி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.