ரயிலில் கடத்தி வந்த 30 மதுபாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது
போலீசார் சோதனையில் 60 கிலோ கஞ்சா மற்றும் 30 மது பாட்டில்கள் பறிமுதல்கொரோனா அச்சத்ததால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பேருந்துகள் எதுவும் இயங்காத நிலையில் ஒரு சில ரயில் சேவை மட்டும் இயங்கி வருகிறது. திருச்சியில் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,ராக்போர்ட் உள்ளிட்ட விரைவு ரயில் சேவைசொற்ப அளவிலேயே முன்பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வடமாநிலத்தில் இருந்து ஹவுரா மைசூர் ரயிலில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலையடுத்து அதில் வந்த பயணிகளை ரயில்வே பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது திருச்சி பொன்நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான தங்கராசு என்பவரது பையில் 30 மது பாட்டில்கள் இருந்தது கண்டறியப்பட்டது.இதனையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர். அதேபோன்று திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பார்சல்கள் கிடப்பதாக வந்த தகவலையடுத்துரயில்வே போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.அப்போது அந்த பார்சலில் 60 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது