மானியம் பெற்று நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு வாய்ப்பு

0 403
Stalin trichy visit

திருவெறும்பூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் உதவி இயக்குனர் எஸ்தர் பிரம்மகுமாரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
சிறு குறு விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் தெளிப்பு நீர், சொட்டு நீர், மழை துவான் கருவிகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக திருவெறும்பூர் வட்டாரத்திற்கு மட்டும் 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சம் 25 ஆயிரம் மானியம், டீசல் பம் செட் மற்றும் மின்சார மோட்டார் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் அல்லது 15 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

 

பாசன குழாய் அமைப்பதற்கு ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல் நில நீர் தொட்டி அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூபாய் 40 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதாகவும்,  இந்த நுண்ணீர் பாசன திட்டம் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் முதல் பக்க நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சிறு குறு விவசாயி சான்று, நில வரைபடம் ஆகிய ஆவணங்களுடன் உங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலரை அனுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.