சுமைதூக்கும் தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.42,397 மோசடி

0 451
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த தெற்கு எல்லைக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன்(34). திருப்பூரில் நிறுவனம் ஒன்றில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பணிமுடித்து விடுமுறையில் ஊருக்கு வந்த சரவணனின் செல்போன் எண்ணிற்கு கொரோனா நிதிஉதவி வழங்க இருப்பதாக ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன்படி முதலில் சரவணனின் ஆதார் மற்றும் வங்கிப் புத்தகம் ஆகியவற்றை போனில் பேசிய நபர் அவரின் எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார்.

உடனே சரவணனும் தன்னுடைய ஆதார்கார்டு மற்றும் வங்கி புத்தகத்தை சம்மந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் கொரோனா நிதி பெறுவதற்கு முதலில் 19,999 ரூபாய் தனது வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு மர்ம நபர் கூறியதை அடுத்து சரவணனும் போனில் பேசிய நபருக்கு முதலில் 19,999 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் 19898 ரூபாயும், அதன் பின்னர் 2,500 ரூபாய் என மோத்தம் 42,397 ரூபாய் முகம், முகவரி தெரியாத நபருக்கு அனுப்பி விட்டு அதன் பின்னர் தனக்கு வர வேண்டிய தொகையை கேட்ட போது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சரவணன் திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளியிடம் நூதன முறையில் நடந்த இந்த மோசடியால் சரவணன் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.