குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்து காவல் அலுவலர்களுக்கு பயிற்சி

0 288
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு சார்பில் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்து குழந்தை நல காவல் அலுவலர்களுக்கான பயிற்சி.15.07.23 நடைப்பெற்றது.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் பயிற்சியை தொடங்கி வைத்து தலைமை தாங்கினார்.
குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு பாதுகாப்பு பராமரிப்பு தேவைப்படக்கூடிய குழந்தைகளை குழந்தை நலக்குழு முன் ஆஜர்படுத்துவது குழந்தை மறுவாழ்வு மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் குழந்தை நல காவல் அலுவலர்கள் கையாளும் விதம், அணுகுமுறை ஊராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுவில் காவலர்களின் பங்கு குறித்தும் இளஞ்சிறார் நீதி குழுமம் உறுப்பினர் அஜந்தா சட்டத்துக்கு முரண்பட்ட குழந்தைகளை இளஞ்சிறார் நீதி
குழுமத்தின் முன் ஆஜர்படுத்துவது குழந்தை நல காவல் அலுவலர்கள் நடைமுறை மற்றும் ஆவணபடுத்துதல் குறித்தும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ஸ்ரீவித்யா பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல் நிவாரணத் தொகை வழங்குதல் படிவம்
அ மற்றும் ஆ சமர்ப்பித்தல் குறித்தும் சமூகப்பணியாளர் பிரியதர்ஷினி சிறப்பு இளஞ்சிறார் காவல் அலகு மூலமாக உள்ள காவலர்கள் குழந்தைகள் பாதுகாப்பில் செய்ய வேண்டிய, காவல்நிலையங்களில் செய்யவேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளித்தார்கள். குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சிவராஜ் வரவேற்றார் திருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி நன்றி கூறினார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து குழந்தை நல காவல் அலுவலர்கள், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் பயிற்சியில் பங்கேற்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.