சாலை விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு

0 273
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபான கடையில் வேலை செய் கூலித் தொழிலாளி சாலையைக் கடக்கும் போது அவ்வழியே வந்த கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மண்ணச்சநல்லூர் அருகே வாழையூர் ஹரிசனத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (65). இவர் தச்சங்குச்சியில் உள்ள அரசு மதுபான கடையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலைவில் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக சிறுகனூரில் உள்ள ரெட்டிமங்குங்குடி பிரிவிலிருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் முருகேசன் மீது மோதி விட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய காரை தேடி வந்தனர்.அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹைவே பேட்ரோல் போலீசார் சந்தேகத்திற்கு இடமான வந்த காரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுகனூரில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கார் என தெரிய வந்தது.இந்த காரை பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஓட்டுவந்துள்ளார் என தெரியவந்தது.

பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் கார் டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.