திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி விழா தொடங்கியது

0 528
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா கோலாகலமாக துவங்கியது – பகல் பத்து முதல் நாள் உற்சவத்தில் கொள்ளை கொள்ளும் பேரழகுடன் ராஜ நடை போட்டு வலம் வந்த திருவரங்கன் ….

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் என்றழைக்கப்படும் முதல் விழாவுடன் நேற்று தொடங்கியது.

இந்நிலையிப் பகல் பத்து வைபவத்தின் முதல் நாளான இன்று நம்பெருமாள் காலை 7.00 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.

பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் …
ரத்தின காது காப்பு,வைர அபயஹஸ்தம்,லட்சுமி பதக்கம், பவளமாலை, முத்து சரம்,அடுக்கு பதக்கம் உள்ளிட்ட எழில் மிகு திருக்கோலத்தில் புறப்பட்ட நம்பெருமாள் ராஜ நடைப்போடு
வலம் வந்து சரியாக
7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார்.

நம்பெருமாள் புறப்பாடின் போது ரங்கப்பிரபு … ரெங் நாதா என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பகல் பத்து விழா முதல் நாளான இன்று
நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார் – பின்னர் இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சேர்கிறார்.

வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் வருகின்ற 22ஆம் தேதியும் – வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற 23ஆம் தேதி சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.