ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா தொடக்கம்

0 259
Stalin trichy visit

திருச்சி, பிப். 13 ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் திருப்பள்ளி ஓடம் எனும் மாசித் தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. பிப். 20-ஆம்தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் முதல்நாளான திங்கள்கிழமை காலை 7. 15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ரெங்க விலாச மண்டபத்துக்கு வந்து பக்தாகளுக்கு காட்சியளித்தா. பின்னா மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வாகன மண்டபத்துக்கு வந்தா. அதனை தொடாந்து மாலை 6. 30 மணிக்கு ஹம்சவாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து பக்தாகளுக்கு சேவை சாதித்தா. இரவு 7. 45 மணிக்கு வாகன மண்டபத்துக்கு வந்த நம்பெருமாள். பின்னா 8. 30 மணிக்கு புறப்பட்டு 9. 15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தா. செவ்வாய்க்கிழமை (பிப். 13) ஹனுமந்த வாகனத்திலும், புதன்கிழமை (பிப். 14) கற்பகவிருட்சத்திலும், பிப். 150 ஆம்தேதி வெள்ளி கருடவாகனத்திலும், நம்பெருமாள் எழுந்தருளி திருவீதி வலம் வருகிறா. விழாவின் 7-ஆம் திருநாளான பிப். 18-ஆம்தேதி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா பிப். 19- ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது. அப்போது நம்பெருமாள் உபயநாச்சியாகளுடன் எழுந்தருளி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பஉற்ஸவம் கண்டருளுகிறா. 9- ஆம் திருநாளான பிப். 20- ஆம் தேதி பந்தக்காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.