18 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் மீண்டும் துவங்கிய அன்னதானம்; பொதுமக்கள் ஆர்வமுடன் உணவருந்தி செல்கின்றனர்

0 313
Stalin trichy visit

108 வைணவ திவ்ய தலங்களில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம், தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

அறநிலையத்துறையின் கீழ் ஆலயங்களில் வழங்கப்படும் அன்னதான திட்டம் கொரோனோ அச்சம் காரணமாக பல மாதங்களாக நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஏறத்தாழ 18 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் இன்று அன்னதான திட்டம் மீண்டும் துவக்கி வைக்கப்பட்டது.

 

ஸ்ரீரங்கம் கோவிலின் இணை ஆணையர் (பொறுப்பு ) கல்யாணி இன்று அன்னதானத்தை துவக்கி வைத்தார். இத்தனை நாட்களாக அன்னதானம் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில்,
பொதுமக்கள் இன்று அன்னதான கூடத்தில் அமர்ந்து அன்னதானத்தை சாப்பிட்டு சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.