திருச்சி மணப்பாறை, மருங்காபுரி ஒன்றிய அதிமுக – திமுக வேட்பாளர்கள்!

0 470
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறை மருங்காபுரி ஒன்றிய பகுதியில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் காலியாக உள்ள ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக திமுக வேட்பாளர் பட்டியலை கட்சியினர் அறிவித்துள்ளனர்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட அமயபுரம் பழையகோட்டை ஊராட்சிகள் அடங்கிய 6வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் ஓந்தாம்பட்டியைச் சேர்ந்த ராஜி மகள் ஜானகி மற்றும் திமுக சார்பில் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி செல்லமணி, மருங்காபுரி ஒன்றியத்துக்குட்பட்ட வளநாடு கவுண்டம்பட்டி ஊராட்சிகள் அடங்கிய 10வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் வாடிப்பட்டி தங்கவேல் மனைவி கனகவல்லி, திமுக சார்பில் வளநாடு சபியுல்லா மகள் சபியுன்நிஷா ஆகிய அந்த கட்சியின் தலைமையிடம் அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் புதன்கிழமை அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் மனு தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.