தள்ளுவண்டி கடைகாரரிடம் பணம் பறித்த 3 பேர் கைது

0 263
Stalin trichy visit

திருச்சி சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெரோம் சந்தியாகு (வயது 31). இவர் சிந்தாமணி பஜாரில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே தள்ளுவண்டியில் வருவல் கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் சம்பவ இடத்தில் வியாபாரம் செய்தபோது அங்கு வந்த மூன்று பேர் ஜெரோம் சந்தியாகுவிடம் வாய் கொடுத்து தகராறில் ஈடுபட்டு செலவுக்கு ரூ.500 பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பணம் தர மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்து விடுவதாக அவரிடமிருந்து ரூ.500-ஐ பறித்துச் சென்றதாக ஜெரோம் சந்தியாகு கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிவு செய்து ஜீவா நகர் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த ஜெயா என்கிற ஜெயச்சந்திரன் (வயது 27), தேவதானம் வீரமுத்து நகரை சேர்ந்த சந்துரு (வயது 42), பழைய கரூர் ரோடு சஞ்சய் காந்தி நகரை சேர்ந்த முகமது ரபிக் (வயது 25) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.