காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவி சிலம்ப போட்டியில் சாதனை
சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 39வது மாநில அளவிலான சப்-ஜீனியர் 25 கிலோ எடை பிரிவில் திருச்சி மாவட்டம், மின்னல் சிலம்பம் பயிற்சி பள்ளியின் சார்பாக காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் சீலைப்பிள்ளையார்புத்தூர் சேர்ந்த மாணவி ச.காவ்யா பங்கேற்று மாநில அளவில் வெள்ளி பதக்கம் வென்று தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
மேலும் மின்னல் சிலம்பம் பயிற்சி பள்ளியின் தலைமை ஆசான் த.ஜெயச்சந்திரன் (திருப்பூர்) வழி வந்த பயிற்சியாளர் எம்.வைரவேல் பயிற்சியாலும், திருச்சி மாவட்ட சிலம்பாட்ட கழகத்தை வழி நடத்தும் செயலாளர் மதன் கென்னடி ஆலோசனை படி நடந்து திருச்சி மாவட்டத்திற்கு மாணவி பெருமை சேர்த்துள்ளார். இதற்கு காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நீதி ராஜா மற்றும் பெற்றோர் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.