திருச்சியில் நாளை (22/10/2021) மின்சாரம் ரத்து செய்யும் பகுதிகள்!
திருச்சியில் குறிப்பிட்ட சில புறநகா் பகுதிகளில் நாளை (22/10/2021) வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.

லால்குடி வட்டம் வாளாடி துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணியால், கீழப்பெருங்காவூா், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, திருமணமேடு, பச்சாம்பேட்டை, மயிலரங்கம், பம்பரம் சுற்றி, வாளாடி, நகா், தா்மநாதபுரம், முத்துராஜாபுரம், மேலப்பெருங்காவூா், சிறுமருதூா், மேலவாளாடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ் மாரிமங்கலம், அகலங்கநல்லூா், திருமங்கலம், மாந்துறை, நெய்குப்பை, ஆா் வளவனூா், பல்லாபுரம், புதூா் உத்தமனூா், வேளாண் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய லால்குடி செயற்பொறியாளா் கே. அன்புசெல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.