ரூ.1.12 இலட்சம் பணத்தை பறிகொடுத்த தம்பதியினா் – திருச்சி அருகே பரிதாபம்

0 560
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அம்மாசமுத்திரம்புதூரை அடுத்த அம்பலக்காரப்பட்டியை சோ்ந்தவா் சின்னச்சாமி(36). இவர் பெங்களூரில் உள்ள தனியாா் இரும்பு கம்பெனி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் துவரங்குறிச்சி வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்க ரூ. 1.15 லட்சம் பணத்துடன் தனது மனைவி சசிகலாவுடன் நேற்று காலை வங்கிக்கு சென்றாா்.

அங்கு மொத்தப் பணத்தில் ரூ.3 ஆயிரத்தை தனியாக வைத்துக்கொண்ட சின்னச்சாமி மீதித் தொகையை மனைவியிடம் கொடுத்தாா். சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக வங்கியில் காக்க வைக்கப்பட்டிருந்த தம்பதியின் அருகில் இருந்த நபா் ஒருவா், தன்னை வங்கிப் பணியாளா் என்று அறிமுகம் செய்துகொண்டு பேச்சு கொடுத்துள்ளார்.

 

பின்னா் நகையைத் திருப்ப அஞ்சலகத்தில் படிவம் வாங்கி வருமாறு கூறி சின்னச்சாமியை அனுப்பிய மா்ம நபா், தனியாக இருந்த சசிகலாவிடம் பேசி, தான் பணம் கட்டித் தருவதாகக் கூறி, சசிகலாவிடம் இருந்த ரூ.1.12 லட்சத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவானாா்.

பின்னா் வங்கிக்கு சின்னச்சாமி திரும்பியபோது பணம் பறிபோனது தெரியவந்தது. பின்னா் அவா் அளித்த புகாரின்பேரில் வங்கிக்கு சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனா்

Leave A Reply

Your email address will not be published.