திருச்சி மாவட்டம், மணப்பாறை பூங்காசாலையில் வசித்துவரும் சாகிராபானு என்பவரது வீட்டின் ஆஸ்பெட்டாஸ் கூரையின் சுவர் அருகே ஒரு பாம்பு இருப்பதைக்கண்டு அதிர்ச்சிடைந்தார். இதுகுறித்து மணப்பாறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு பாம்பை தேடினர். ஆனால் பாம்பு தியணைப்புத்துறையினர் கண்களுக்கு சிக்கவில்லை. இதனையடுத்து வீடுமுழுவதும் தேடியதையடுத்து பாம்பு ஆஸ்பெட்டாஸ் கூரைக்கும் சுவருக்கும் இடையே ஊர்ந்து சென்றதைப்பார்த்தனர்.

பின்னர் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பத்திரமாக பிடித்து ஒரு பையில் போட்டு அருகே உள்ள பொய்கைமலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனர். குடியிருப்புகள் நிறைந்து உள்ள இப்பகுதியில் வீட்டிற்குள் பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.