ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம்

0 445
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ஹேமலதாமுத்துசெல்வன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா முன்னிலை வகித்தார்.

புளியஞ்சோலையில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் தரைக்கடை வியாபாரிகள் நிரந்தரமாக கடை வைப்பதற்கு மாத சந்தா வாடகை வசூலிப்பதும், வைரிசெட்டிபாளையம் வார சந்தையில் உள்ள பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார் மன்றத் தலைவருக்கு கோரிக்கையாக முன்வைத்தார்.

கூட்டத்தில் 12 ஒன்றிய குழு கவுன்சிலர்கள், ஒன்றிய ஊராட்சி வளர்ச்சி அலுவலர் சரவணகுமார் கலந்து கொண்டனர். துணைத்தலைவர் கலைச்செல்வி இறுதியில் நன்றியுரை கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.