திருச்சி திருவானைக்காவல் நேதாஜி நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50). சத்திரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியில் உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர். பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, மேஜையில் வைத்திருந்த 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம், ரூ.10ஆயிரத்து 300 மற்றும் 2 வாட்ச் ஆகியவை மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் பாஸ்கரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம ஆசாமிகள் ஜன்னல் வழியே மேஜையில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.