கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் மீது குண்டாஸ்

0 302
Stalin trichy visit

திருச்சி கோட்டை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகன் ஆரோக்கியநாதன். தள்ளுவண்டி வியாபாரியான இவர் கடந்த மாதம் 24-ந் தேதி அதே பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி தென்னூர் ரெயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த பிரவீன்காந்த்(வயது 21) என்பவர் ஜெகன் ஆரோக்கியநாதனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துச் சென்று விட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் பிரவீன்காந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், பிரவீன்காந்த் மீது தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பிரவீன்காந்த் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதால். கோட்டை இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி போலீஸ் கமிஷனர் பிரவீன்காந்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரவீன்காந்திக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை கொடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.