பாம்பு கடித்து முதியவர் பலி

0 444
Stalin trichy visit

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள உளுந்தங்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 60). கூலித்தொழிலாளியான இவர் வயல் பகுதியில் அவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்து விட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டுக்கு வந்த நிலையில் மயங்கிக்கீழே விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.