திருச்சி மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர் நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் லால்குடி வட்டத்துக்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன கியாஸ் முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது திருச்சி மாவட்டம் லால்குடி தாசில்தார் அலுவலகத்தில் வரும் 24-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.
இதில் லால்குடி வட்டத்துக்குட்பட்ட கியாஸ் நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்று கொள்ள வேண்டும். இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் லால்குடி வட்டத்துக்குட்பட்ட நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கியாஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்அடைய வேண்டும். இந்த தகவலை கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.