திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அமைச்சர்!
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதையடுத்து திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகளில் உள்ள பயணிகள் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகள் ஆகியோருக்கு இனிப்புகள் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

திமுக மற்றும் விவசாயிகளின் ஓராண்டாக தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றதை கொண்டாடும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்விற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் கே எம் சேகரன் என் கோவிந்தராஜன் பகுதி கழக செயலாளர் நீலமேகம் ஒன்றியக் கழகச் செயலாளர் கே எஸ் எம் கருணாநிதி பேரூர் கழக செயலாளர் செல்வராஜ் ஒன்றியக் குழுத் தலைவர் சத்யா கோவிந்தராஜ் விவசாய தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.