டெங்கு காய்ச்சலுக்கு திருச்சி கல்லூரி மாணவி உயிரிழப்பு!

0 627
Stalin trichy visit

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் சிறப்பு முகாமில் வசித்து வருபவர் முகுந்தன். பெயின்டர் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி இவருக்கு ஒரு மகன் இரண்டு மகன்கள் உள்ளனர். மகள் ஜீவிதா திருச்சியில் உள்ள அரசு கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜீவிதாவுக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக மெடிக்கலில் மருந்து வாங்கி சாப்பிட்டு வீட்டில் இருந்துள்ளார். ஆனாலும் காய்ச்சல் விடவில்லை. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.