திருச்சியில் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் பள்ளி ஆசிரியர் பலி!
திருச்சி உறையூர் அம்மையப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் . இவரது மனைவி மங்கையர்கரசி திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக உறையூர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பாலக்கரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அரசு மருத்துவமனை அருகே வந்தபோது திடீரென தனியார் கல்லூரி பேருந்து ஒன்று இவரின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பேருந்தின் சக்கரங்கள் மங்கையர்கரசியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியை மங்கையர்கரசி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலரிருந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் தனியார் கல்லூரி பேருந்து மோதி உயிரிழந்த அரசு பள்ளி ஆசிரியை மங்கையர்கரசி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வடக்கு புலனாய்வு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.