திருச்சி விமான நிலையத்தில் தண்ணீர்‌ இறைக்கும் மோட்டாரில் மறைத்து கொண்டு வரப்பட்ட 23 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

0 345
Stalin trichy visit

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்திலிருந்து தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சார்ஜாவில் இருந்து வந்த சரக்கு விமானத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த சோதனையின் போது 23 லட்சம் மதிப்பிலான 463 கிராம் கொண்ட வட்ட வடிவிலான் தங்கம், தண்ணீர் மோட்டார் பம்பில் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தங்கத்தைப் கைப்பற்றி யார் இதை அனுப்பி வைத்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.