ஆட்சி மாறியும் நடவடிக்கை இல்லை
அதிமுக ஆட்சி காலம் முதல் திமுக ஆட்சிக்கு வந்த நாள் வரை எத்தனையோமுறை மின்வாரியத்துக்கு தெரியப்படுத்தியும், திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அகலங்கநல்லூர் செல்லும் வழியில் சாலையோரம் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மிகவும் ஆபத்தாக சாய்ந்த நிலையில் உள்ளது.

இப்பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பெரும் விபத்து நடப்பதர்க்குள் பின்னி பிணைந்து கிடக்கும் மின்கம்பத்தையும், தென்னை மரத்தையும் அகற்றி லால்குடி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மின்வெட்டு இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.