நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

0 401
Stalin trichy visit

திருச்சி நகரியம் கோட்டம் சிந்தாமணி பிரிவிற்கு உட்பட்ட உறையூர் பகுதியில் உயரழுத்த மின்பாதைகளில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன்படி சாலை ரோடு, சுபானியபுரம், உறையூர் ஹவுசிங் யூனிட், வெட்டுகுழித்தெரு, கண்ணப்பா ஹோட்டல் பின்புறம் மற்றும் புது காலனி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திருச்சி நகரியம் செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கே.சாத்தனூர் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்ப நகர், எல்.ஐ.சி. காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, ஆர்.வி.எஸ். நகர், ஒயர்லஸ் ரோடு,

செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரி நகர், காஜாநகர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9.45 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திருச்சி மின்செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.