கொடைக்கானலுக்கு பைக்கில் சென்றபோது திருச்சியில் விபத்து – வாலிபர் பலி!

0 846
Stalin trichy visit

சென்னை முத்தமிழ்நகா் பகுதியைச் சோந்த ராம் மகன் கிருஷ்ணராமன் (22). இவரும் இவரது நண்பா் திருவள்ளுவா் மாவட்டம், கட்டபொம்மன் சாலைப் பகுதியைச் சோந்த ஜெ. சதீஷ் (22) ஆகிய இருவரும் சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு நேற்று பைக்கில் சென்றனா்.

அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் அருகே இருவரும் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கிருஷ்ணராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் இருந்த சதீஷ் பலத்த காயமடைந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த சமயபுரம், கொள்ளிடம் போலீஸாா் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். படுகாயமடைந்த சதீஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சோக்கப்பட்டாா். மேலும் இதுகுறித்து கொள்ளிடம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்

Leave A Reply

Your email address will not be published.