துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து; தம்பி பலி- அண்ணன் படுகாயம்

0 274
Stalin trichy visit

நாமக்கல் மாவட்டம், வரகூர் அடுத்த தோட்டமுடையான்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன்கள் குமரவேல்(வயது 56), பிரித்திவிராஜ் (வயது 45). இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் பிரித்திவிராஜியின் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு கொளக்குடி கிராமத்திற்கு செல்வதற்காக அண்ணன், தம்பி இருவரும் மொபட்டில் வந்துள்ளனர். அப்போது முசிறியிலிருந்து பவித்திரம் செல்லும் மெயின் ரோட்டில் கோணப்பம்பட்டி கிராமம் அருகே உள்ள முருகன் கோவில் சாலை வளைவில் எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் மொபட்டில் சென்ற இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிரித்திவிராஜ் பரிதாபமாக இறந்து போனார். படுகாயமடைந்த குமரவேல் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து பிரித்திவிராஜ் உடலை முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் அரசுபஸ் டிரைவர் சிவகுமாரை(வயது 47) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.