முதியோர் இல்லத்தில் அட்வான்ஸ் தீபாவளி கொண்டாட்டம்
திருச்சி மாவட்டத்திலுள்ள வயலூரில் ஸ்ரீவருத்தாஸ்ரம் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் 31.10.21 மாலை 6 மணியளவில் நிறுவனர் கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
ஸ்ரீவருத்தாஸ்ரம் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு புத்தாடையும், இனிப்புகள் வழங்கி பட்டாசுகள், வெடிகள், புஷ்வானம், மாத்தாப்பு போன்றவையுடன் தீபாவளி கொண்டாடப்பட்டது.

இதில் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி மறுவாழ்வுத்துறை இணை இயக்குநர் சந்திரமோகன்,
மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஷ்குமார், உடன் முதியோர் இல்ல நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.