பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது

0 381
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் நடைபெற்று வரும் நாடு வார சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை கனஜோர் ஒரு கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகின்ற 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். அன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் குர்பானி கொடுத்து தொழுது, ஒற்றுமையுடன் இணைந்து வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது வழக்கம். கூட்டு குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வாங்குவார்கள்.

இந்நிலையில் சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தையில் ஆடுகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு வார சந்தைக்கு ஆடுகள் விற்பனைக்கு அதிகளவில் வந்துள்ளது.

இந்த ஆட்டு சந்தைக்கு சமயபுரம், மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, பாடாலூர், கல்லக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தாங்கள் வளர்த்த வெள்ளாடுகள் செம்மறி ஆடுகள் வாரந்தோறும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதை வாங்குவதற்காக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காகவும் ஆட்டுக்குட்டிகளை வளர்ப்பதற்காகவும் வாங்கி செல்கின்றனர்.

வரும் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட ஆட்டு சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் வரத்து அதிக அளவில் இருந்தது

பக்ரீத் பண்டிகைகாக அதிக அளவில் ஆடுகளை விற்பனை செய்வதற்காக ஆடு விற்பனையாளர்களும் ஆடுகளை வாங்க வியாபாரிகளும் வந்துள்ளனர்.

மேலும் இன்று நடைபெற்ற ஆடு வாரச்சந்தையில் ஒரு கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.