பைக் மீது மோதிய அரசு பேருந்து: ஊராட்சி செயலாளர் உயிரிழப்பு

0 482
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம் பழனியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அரசு ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லால்குடி அருகே அன்பில் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன்  கரிகாலன்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இவர் முசிறி தாலுகாவில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தனது பணிகளை முடித்துவிட்டு நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து தனது மோட்டார் பைக்கில் குறிச்சியில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அதேபோல் லால்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பழனி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் பைக் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் கரிகாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.