ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் திருச்சி மாவட்ட கவுன்சில் கூட்டம்

0 309
Stalin trichy visit

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் திருச்சி மாவட்ட கவுன்சில் கூட்டம் மாவட்ட தலைவர் நடராஜா தலைமையில் தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் க.சுரேஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல், பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறுவதையொட்டி திருச்சி மாநகர் மற்றும் ஒன்றிய, தாலுகா தலைநகரங்களில் மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் சாலை, ரெயில் மறியலில் பெரும் திரளாக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.