லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து… பிறந்து 16 நாள் ஆன குழந்தை உட்பட 4 பேர் காயம்

0 277
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அகிலாண்டபுரம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பிறந்து 16 நாள் ஆன குழந்தையும் அவரது தாயும் ஆம்புலன்சு ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லால்குடி அருகே அகலங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மனைவி கவிதா என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்து 16 நாட்களாகியும் குழந்தை இயற்கை உபாதை கழிக்க வில்லை இதுதொடர்பாக லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலனளிக்காததால் மேல்சிகிச்சைக்காக தாய் கவிதா அவரது குழந்தை ஆகியவற்றை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக லால்குடி மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

108 ஆம்புலன்ஸ் லால்குடி அடுத்த அகிலாண்டபுரம் பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்ற போது முன்னால் சென்ற பேருந்தை முந்தி செல்லும் பொழுது no.1 டோல் கேட்டில் இருந்து லால்குடி நோக்கி வந்த லாரி மீது 108 ஆம்புலன்ஸ் மிக வேகமாக மோதியது.  இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பழனிவேல் அவரது உதவியாளர் செந்தில்குமார் மற்றும் ஆம்புலன்சில் இருந்த கவிதா அவரது குழந்தை பிறந்து 16 நாட்கள் ஆன ஆண் குழந்தை என 4 பேரும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதனால் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.