குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 8 அடி நீளம் கொண்ட மலை பாம்பு
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கள்ளக்காம்பட்டி என்ற கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் ஒரு பாம்பு ஒன்று இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் நிலை அலுவலர் பொறுப்பு நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு சென்று பார்த்தபோது அது சுமார் 8 அடி நீளம் கொண்ட மலை பாம்பு என்று தெரியவந்தது. இதையடுத்து பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாம்பை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.