சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

0 337
Stalin trichy visit

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 19). இவர் 17 வயதுடைய சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தனிமையில் சந்தித்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததால் இரு வீட்டு பெற்றோரும் பேசி கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் சிறுமி பிரசவத்திற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு 17 வயதே ஆனது தெரியவந்ததால் இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் முத்துக்குமார் மீதும் மற்றும் அவரது தந்தை முருகேசன், சிறுமியின் தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.