திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டு இருந்த 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. பின்னர் 2 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.