அரசு மருத்துவமனையில் குழந்தைகளின் நலன் காக்கும் பொருட்டு விழிப்புணர்வு

0 358
Stalin trichy visit

உலக குழந்தைகள் நல தினவிழாவையொட்டி திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி குழந்தைகள் நலத்துறை சார்பில் அரசு மருத்துவமனையில் குழந்தைகளின் நலன் காக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அரசு மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் மருத்துவமனைக்கு குழந்தைகளுடன் வந்த தாய்மார்களை அழைத்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இதர பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?. குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள், 6 மாதத்துக்கு ஒருமுறை தவறாமல் போட வேண்டிய தடுப்பூசிகள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. இதில் செவிலிய மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.